தர்மம்
இது ஒரு கார்பனை கதை. எல்லா கதையிலும் ஒரு தொடக்கம் இறுக்கும். அதேபோல எனது கதையின் தொடக்கம் இப்படித்தான்
ஒரு கிராமத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் ஒரு சிறுவன் பிறக்கின்றான் அவனுக்கு தர்மன் என்று பெயர் சூட்டினார் .
அவனுக்கு ஐந்து வயது இருக்கும் போது ஒரு செயல் செய்கின்றான்
ஒரு நாள் அவனது நண்பன் எழுதுகோல்லை துலைத்துவிட்டு
அழுது கொண்டிருந்தான்.
அதை கண்ட தர்மன் அவனது வீட்டிற்கு சென்றான் அம்மா சேர்த்து வைத்திருந்த காசை எடுத்து வந்து அவனது நண்பனுக்கு எழுதுகோலை வாங்கி கொடுக்கின்றான் .
அவனது தாய் வேலை முடித்து வீடு திரும்பினார் .
அப்பொழுது அவர் காசு சேர்த்து வைத்திருந்த பெட்டி கீழே விழுந்து காசு சிதறிக் கிடந்தது அதை கண்டு பதறுகிறார் விளையாடி வீடு திரும்பிய தர்மனிடம் நீ இந்த பெட்டியை எடுத்தாயா என்று கேள்வி கேட்கிறார் .
அப்பொழுது அவன் வாயை திறக்கவில்லை அவனது தாய் காசை எண்ணிப் பார்க்கிறார் அதில் காசு குறைவாக இருந்தது அப்பொழுது அவனுடைய தாய் மீண்டும் அவனிடம் கேட்கிறார்.
நீ இந்த பெட்டியை எடுத்தாயா அப்போது அவன் வாயை திறக்கவில்லை கோபமுற்ற தாய் அவனை அடிக்கிறான் நீ எடுத்தாய் என்று மீண்டும் கேட்கிறார் அப்பொழுது தர்மன் தலை மட்டும் ஆம் என்ற போல தலையை ஆட்டுகிறான் .
தாய் தர்மனிடம் ஏன் எடுத்தாய்? என்று கேள்வி கேட்கிறார் அவனிடம் கேட்காமல் எடுப்பது தவறு இல்லையா என்று தாய் மீண்டும் கேட்கிறார் கேட்காமல் எடுத்தாள் அதற்குப் பெயர் திருட்டு தானே என்று கூறுகிறார்.
உடனே தர்மன் அம்மா நீங்கள் தானே சொன்னீர்கள் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டி தவறு செய்தால் அந்த தவறும் சரிதான் என்றேன் இதைக் கேட்ட தாய் நீ யாருக்கு உதவினாய் என்று கேட்டார் .
அப்பொழுது அவன் நடந்ததை கூறினார் இந்த சிறுவயதில் உனக்கு இப்படி ஒரு மனசா என்று அதிசயம் கொள்கிறார் .
ஆனால் அந்த தாய்க்கு தெரியவில்லை இதைவிட பெரிய அதிசயம் இன்னும் பார்க்க இருக்கிறது என்று
Tags
Others